Ultimate magazine theme for WordPress.

கொரோனா தடுப்பு நடவடிக்கை: நடிகர் அஜித் ₹1.25 கோடி நிதியுதவி

கொரோனா வைரஸ் தொற்று உலகம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

ஒரு பக்கம், தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மறுபுறம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் வாழ்வாதரத்திற்கு சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் உதவி வருகின்றனர்.

அத ஒரு பகுதியாக நடிகர் அஜீத் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். மேலும், சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ஃபெப்சி அமைப்புக்கு ரூ. 25 லட்சம் நன்கொடையாக நடிகர் அஜித் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.