Ultimate magazine theme for WordPress.

ஹோண்டா அமேஸ் கார்கள் விலை ரூ 31,000 வரை உயர்வு

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் காரானா ஹோண்டா அமேஸ் காரின் விலையை ஹோண்டா நிறுவனம் ரூ 31 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ஹோண்டா அமேஸ் கார் அதிக அளவிலான விற்பனையை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா அமேஸ் கார் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் புதிய வெர்ஷன் அறிமுகமாகி மார்கெட் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது.
கடந்த ஜூலை மாதம் மட்டும் ஹோண்டா நிறுவனம் மொத்தம் 10,180 கார்களை விற்பனை செய்துள்ளது. இது தான் அந்நிறுவனத்தின் அதிகபட்ச ஒரு மாத விற்பனையாகும். கடந்த ஜூன் மாதம் மொத்தம் 9,103 கார்கள் விற்பனையாகியுள்ளன. மே மாதம் 9,879 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் காராக ஹோண்டா அமேஸ் கார் மாறியுள்ளது. இந்த கார் ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி காரை ரிபிளேஸ் செய்கிறது.
தற்போது அந்த காருக்கான விலைய அதிகரித்துள்ளது ஹோண்டா நிறுவனம். அதன் படி பெட்ரோல் வேரியன்டை பொருத்தவரை ரூ 5.59 லட்சம் விற்ற மேனுவல் இ வேரியன்ட் தற்போது ரூ5.80 லட்சம் ஆகவும், ரூ 6.49 லட்சம் விற்ற மேனுவல் எஸ் வேரியன்ட் இனி ரூ 6.60 லட்சமாகவும். ரூ7.09 லட்சம் விற்ற வி வேரியன்ட் ரூ 7.20 லட்சமாகவும், ரூ 7.39 லட்சம் விற்ற சிவிடி எஸ் வேரியன்ட் இனி ரூ 7.50 லட்சமாகவும், ரூ 7.57 லட்சம் விற்ற மேனுவல் விஎக்ஸ் வேரியன்ட் ரூ 7.68 லட்சமாகவும், ரூ7.99 லட்சம் விற்ற சிவிடி வி வேரியன்ட் ரூ 8.10 லட்சமாகவும் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளுது.
Sr no. Honda Amaze Petrol Variants Old Prices (ex-Delhi) New Prices (ex-Delhi) 1 E MT ₹ 5,59,900 ₹ 5,80,500 2 S MT ₹ 6,49,900 ₹ 6,60,500 3 V MT ₹ 7,09,900 ₹ 7,20,500 4 S CVT ₹ 7,39,900 ₹ 7,50,500 5 VX MT ₹ 7,57,900 ₹ 7,68,500 6 V CVT ₹ 7,99,900 ₹ 8,10,500
இந்த காரின் டீசல் வேரியன்டை பொருத்தவரை ரூ 6.69 லட்சமாக விற்கப்பட்ட மேனுவல் இ வேரியன்ட் ரூ 6.90 லட்சமாகவும், ரூ 7.59 லட்சமாக விற்ற மேனுவல் எஸ் வேரியன்ட் ரூ 7.70 லட்சமாகவும், ரூ 8.19 லட்சமாக விற்ற மேனுவல் வி வேரியன்ட் ரூ 8.30 லடசமாகவும். ரூ 8.39 லட்சமாக விற்பனையான சிவிடி எஸ் வேரியன்ட் ரூ 8.50 லட்சமாகவும், ரூ 8.67 லட்சமாக விற்பனையான மேனுவல் எம்டி வேரியன்ட் ரூ8.78 லட்சமாகவும், ரூ8.99 லட்சமாக விற்பனையான சிவிடி வி வேரியன்ட் ரூ9.10 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Sr no. Honda Amaze Petrol Variants Old Prices (ex-Delhi) New Prices (ex-Delhi) 1 E MT ₹ 6,69,900 ₹ 6,90,500 2 S MT ₹ 7,59,900 ₹ 7,70,500 3 V MT ₹ 8,19,900 ₹ 8,30,500 4 S CVT ₹ 8,39,900 ₹ 8,50,500 5 VX MT ₹ 8,67,900 ₹ 8,78,500 6 V CVT ₹ 8,99,900 ₹ 9,10,500
இந்த விலை உயர்வு காரணமாக ஹோண்டா அமேஸ் காரின் விலை அதன் நேரடி போட்டியாளரான மாருதி சுஸூகி டிசையர் காரை விட விலை அதிகமாகியுள்ளது. அந்த காரின் விலை ரூ 5.56 லட்சத்தில் பெட்ரோல் வேரியன்டில் இருந்து ரூ 9.43 லட்சம் வரையிலான டீசல் வேரியன்ட்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஹோண்டா அமேஸ் காரை பொருத்தவரை புதிய தலைமுறை அமேஸ் காரில் எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங்கில் சில பிழைகள் இருப்பதால் 7,290 கார் திருப்ப அழைக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.