EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா நிவாரணம்: மானாமதுரையில் அசத்தும் பெண் ஒன்றிய கவுன்சிலர் !

மானாமதுரையில் பெண் ஒன்றிய கவுன்சிலர் ஒருவர், அவருடைய கிராமங்களில் செய்த பணிகளை பேரூராட்சி வார்டு வரை தொடர்ந்து செய்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சிக்கு உட்பட ஒன்றியமான மாங்குளம் ஊராட்சியில் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவர் நாகவள்ளி. இவர் தற்போது கொரோனா வைரஸ், 144 தடை உத்தரவு போன்றவைகளால் அவதி படும் கூலி தொழிர்கள் விவசாயிகள் என அனைவருக்கும் தலா 5 கிலோ அரிசியை வழங்கி வருகிறார்.

மாங்குளம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுமார் 2000 குடும்பங்களுக்கு அரிசி வழங்கி வருகிறார். இந்த பணி தற்போது கிராமங்களில் தொடங்கி அகதிகள் முகாம், மானாமதுரை பேரூராட்சி வார்டு, கன்னர் தெருவரை கொடுத்து வருகிறார்.

இது குறித்து, நாகவள்ளி கூறுகையில், எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும். அதை உடனடியாக அன்றே செய்திட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வேறு எந்த காரணமமும் அல்ல என்றார்.

பொது மக்கள் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் முடிந்து வெற்றி பெற்றால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கஷ்டப்படும் எங்களுக்கு காய்கறிகள், அரிசிகள் கொடுத்து வருகிறார். இது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினர்.